நம்முடைய PROGRAM ஐ ஒருவருக்கு புரியவைக்க நமக்கு கிடைத்திருக்கும் ஒரு அருமையான வாய்ப்பு COMMENTS எழுதுவது. அது என்னவென்று இங்கே பார்ப்போம்.
//WE ARE GOING TO LEARN THE IMPORTANCE OF COMMENTS
இங்கே
// என்கின்ற SYMBOL ளுக்கு அடுத்து இருப்பவை COMMENTS ஆகும்
நாம் எழுதும் program மில் இடம்பெறும் குறிப்புகளைத்தான் comments என்கிறோம். இந்த குறிப்புகளை compiler கண்டுகொள்ளாது. எனவே இது நமது program size யோ அல்லது performance யோ பாதிக்காது.
எதற்காக Comment எழுத வேண்டும்?
நமது Program மில் பல நூற்றுக்கணக்கான வரிகளை நாம் எழுதியிருப்போம். அவ்வாறு நாம் எழுதியதை கொஞ்ச நாள் கழித்து பார்த்தால் எதற்காக இந்த code எழுதப்பட்டிருக்கிறது என்கிற விசயம் ஞாபகத்துக்கு வராது. எழுதிய நமக்கே இப்படியென்றால் நமது code ஐ இன்னொருவர் எப்படி புரிந்து கொள்வார்? எனவேதான் முக்கியமான சில இடங்களில் comment எழுதுவது அவசியமாகிறது.
உதாரணத்திற்கு
ic := yr * 3 * 12
இது எதற்காக எழுதப்பட்டுள்ளது என்று உங்களால் கணிக்க இயலுமா? கஷ்டம் தானே?
சரி இப்பொழுது சொல்லுங்கள்...
//Convert yard into inches
ic := yr * 3 * 12
இப்பொழுது புரிந்தது அல்லவா?
ஒவ்வொரு வரிக்கும் Comment எழுதவேண்டுமா?
அப்படி எழுதக்கூடாது. சில வரிகளை பார்த்த மாத்திரத்திலேயே அதன் அர்த்தம் விளங்கிடும். அதற்கெல்லாம் comment எழுதினால் அது நமக்கே எரிச்சல் கொடுக்கும். கஷ்டமான விசயங்கள் மற்றும் முக்கியமானவைகளுக்கு மட்டும் comment எழுதுவது நல்லது.
உதாரணத்திற்கு
num2 := num1 + 1
இதை பார்த்தவுடனேயே நமக்கு விளங்கிவிடுவதால் இதற்கெல்லாம் comment எழுத அவசியம் இல்லை.
இறுதியாக நீங்கள் எழுதிய comment களை நீங்களே ஒருமுறையாவது படித்து பாருங்கள். இது உங்கள் comment ன் தரத்தை உயர்த்த பிரயோஜனமாக இருக்கும்.
'சி ++' மொழியில் இரண்டு வகையான Comments
1.Single line comments
2.Multiple line comments
Single line comments
ஒற்றை வரி கருத்துரைகளை பயன்படுத்தி வழங்க முடியும்
//
Multiple line comments
பல வரி கருத்துகள் வழங்கப்படும்
/*......................*/
Rules for Writing Comments
1. Program contains any number of comments at any place
Example
#include <iostream>
using namespace std;
int main() {
// variable declaration
int a,b,c;
a=10;
b=20;
c=a+b;
cout<<"Sum: "<<c;
return 0;
}
2. Nested Comments are not possible, that means comments within comments.
void main()
{
/*
/* comments */
*/
}
3. Comments can be splits over more than one line.
Example
void main()
{
/* main
function
body part
*/
}
4. Comments are not case sensitive.
Example
void main()
{
/* MAIN Function BODY */
}
5. Single line comments start with "//"
No comments:
Post a Comment