Program என்றால் என்ன?
புரோகிராமிங் என்பது கணிணி என்ன செய்யவேண்டும் என்பதை குறிப்புகளாக programming language ல் அதற்கு புரிகிற மாதிரி எழுதி நமக்கு தேவையான ரிசல்டை பெறும் ஒரு கலை.
Programming building blocks என்றால் என்ன?
எந்தவொரு Programming Language ஐ எடுத்துக்கொண்டாலும் அதில் சில அடிப்படையான விசயங்கள் இருக்கும். நீங்கள் எழுதும் program எதுவாக இருந்தாலும் இந்த அடிப்படைகளை கொண்டுதான் உங்களால் எழுதமுடியும். இதைத்தான் Programming building blocks அல்லது Programming elements என்கிறோம்.
உதாரணம் சொல்லவேண்டும் என்றால் ஒரு கட்டடம் எழுப்ப என்னென்ன பொருட்கள் (building blocks) தேவை என்பதை தெரிந்துகொண்டோமேயானால் அதே பொருட்களை வைத்து ஒரு வீட்டையோ, அலுவலகத்தையோ அல்லது வேறு எதையோ கட்டமுடியும் அல்லவா அதைப்போன்றதுதான் இந்த அடிப்படை விசயங்களும்.
எனவே இவற்றை நாம் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொண்டால்தான் எந்தவொரு Programming Language ஐயும் நம்மால் எளிதாக புரிந்துகொள்ள முடியும். மேலும் ஒரு Programming Language ஐ படித்துவிட்டு அடுத்த Programming Language ஐ எளிதாக கற்க முடியும்.
Programming building blocks ல் என்னென்ன உள்ளன?
- Variables
- Data types
- Identifiers
- Constants
- Operators
- Expressions
- Comments
- Assignment statements
- Conditional statements
- Looping statements
- Simple statements
- Compound statements
- Functions
- Parameters
- Procedures
- Scope
No comments:
Post a Comment